BIOGRAPHY


Being a seedling from a plant is blessing. So is, Vanathi Srinivasan, born to Mr.Kandaswamy – Poovathal, a traditional family, who practice agriculture with utmost divinity. In a hamlet named Uliyampalayam, further from the famous Marudamalai temple of Coimbatore. As a proud responsible elder sister, she heads the voice. Younger brother Shivakumar Kandaswamy lives in New Jersey, USA and was Formerly Chief Technology Officer of ZSL Inc.

Her Primary and Secondary education was done at a Government Aided school in Thondamuthur village of Coimbatore District. She also bagged the School Topper in her Tenth Grade. A Noteworthy point, she being a winner in various fields like Oratory, Drama, Quiz and Essay Writing, made her as a predominated and unique student in her School. Not giving up on the Culture, she learnt Karakattam for a period of 5 years and also served as a Captain in both kho-kho and volley ball teams.

She further graduated in Chemistry as her Undergraduate in the PSG Arts and Science College, Coimbatore. She stepped forward and completed her Law Degree in the famous Dr.Ambedkar Government Law College, Chennai. A further move, as a Law Post Graduate she completed her International-Constitutional Law, at the prestigious Madras University.

In 1983, Under Shri.B.S.Gnanadesikan, Senior Advocate (Formerly Tamil Nadu Congress Committee President), she started her professional world. After short stint in Supreme Court, she has been practicing in Chennai High Court ever since for more than two decades now.

In 2010, it is to be noted that, Vanathi Srinivasan was a Special Invitee for US State Development for Young Leaders Programme.

Adding feather to her Cap, She
¥ Was a Standing Counsel for Southern Railway and Union Government.
¥ Was a Student activist – ABVP, State Joint Secretary
¥ Was a Censor Board - Advisory Panel Member
¥ Was the State Coordinator for Statue of Unity and Run for Unity
¥ Was a Mahila Morcha, BJP – Tamil Nadu State General Secretary
¥ Was The State Secretary, BJP Tamilnadu
¥ Currently The Vice President, BJP Tamilnadu
¥ Political and Social issues – TV debater
¥ Co-incharge - “Veeduthorum Modi Program”.
¥ Founder Trustee of Thamarai Shakthi Trust – an NGO working for Women Empowerment.


Mr. Srinivasan, being the better half is a prominent lawyer of Madras High Court, currently serving as Union Government’s Assistant Solicitor General in Madras High Court. He was a Member in the National Youth Commission, New Delhi during Shri.Vajpayee’s tenure as Prime Minister. He had done his practice with Senior Advocate Shri.Prashanth Bhushan in Supreme Court. Now he is holding the responsibility of State Secretary of Vishva Hindu Parishad, North Tamil Nadu.

Adarsh V. Srinivasan – the elder son of Mr.&Mrs.Srinivasan, a black belt holder in Karate, and a good cricketer trained at St.Bedes, is pursuing his 12th Grade at Vidya Mandir School, Mylapore.

Kailash V. Srinivasan – youngest son, doing 8th Standard at Vidya Mandir School, an upcoming Cricketer also trying a hand in Karate and drums.
செடியிலிருந்து கிளர்ந்த இளங்கன்றாய் இருப்பது வரம். அவ்வரத்தை போலே திரு. கந்தசாமி – திருமதி பூவாத்தாள் தம்பதியருக்கு மகளாய் பிறந்தவர். பாரம்பரியமிக்க குடும்பம், விவசாயத்தை தெய்வீகமாய் மதிக்கும் வம்சம். கோவையில் புகழ்பெற்ற மருதமலையின் மலைச்சாரலின் அருகே அழகாய் விரிந்திருக்கும் உலியம்பாளையம் கிராமம் இவருடையது. மூத்த சகோதரியெனும் பெருமை மிகு உரிமையோடு குடும்பபொறுப்புகளை ஏற்றார். இவரின் சகோதரர் திரு. சிவக்குமார் கந்தசாமி தற்சமயம் அமெரிக்காவின் நியு ஜெர்சி நகரில் வசித்து வருகிறார் . 

கோவையின் தொண்டமுத்தூர் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்  தொடக்க கல்வி மற்றும் உயர்கல்வியை முடித்தார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். பேச்சு, நாடகம், வினா விடை, கட்டுரை வரைதல், என அனைத்து களங்களிலும் முத்திரை மாணவியாக விளங்கியது இவரின் தனிசிறப்பு. கலாச்சாரத்தின் காதலியாய் கரகாட்டத்தை 5 ஆண்டுகள் கற்ற இவர், பள்ளியின் வாலிபால் மற்றும் கோ-கோ அணிகளின் தலைவியாகவும் அங்கம் வகித்தார். 

பள்ளி கல்வியின் தொடர்ச்சியாய், கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் வேதியியலில் இளநிலை பட்டபடிப்பை முடித்தார். அதன் அடுத்தகட்டமாய் சென்னையிலுள்ள புகழ்பெற்ற டாக்டர். அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் தன் சட்ட படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து “சர்வதேச அரசியலமைப்பு” பிரிவில் தன் முதுநிலை பட்டத்தை பெருமைமிகு மெட்ராஸ் பல்கலைகழகத்தில் முடித்தார். 

1983 ஆம் ஆண்டு, மூத்த வழக்கறிஞர் திரு.பி.எஸ். ஞானதேசிகன் (முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்) அவர்களின் கீழ் தன்னுடைய தொழிலுக வாழ்வை துவங்கினார். சிறிது கால புது தில்லி உச்ச நீதிமன்ற சேவைக்கு பின், சென்னை உயர்நீதி மன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 

2010 ஆம் ஆண்டு அமேரிக்காவில் நடைபெற்ற “இளைய தலைவர்கள் மாநாட்டிற்க்கு” சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். 

மகுடத்திற்க்கு வைரம் வைத்தார் போல் அவர் வகித்து வந்த மற்றும் வகித்து வரும் பொறுப்புகள்:
•  தெற்கு இரயில்வே மற்றும் மத்திய அரசின் நிலையான வழக்கறிஞராக இருந்தவர்.
• அகில் பாரத்திய வித்தியார்த்தி பரிஷத்(ABVP) மாநில துணை செயலாளராக இருந்தவர்
• தணிக்கை குழுவின் அறிவுரை குழு உறுப்பினராக இருந்தவர்
• Statue of Unity மற்றும் Run for Unity நிகழ்வுகளின் மாநில அமைப்பாளராக இருந்தவர்
•   பி.ஜே.பி கட்சி மகளிரணியின் தமிழ்நாடு மாநில பொது செயலாளராக இருந்தவர்
• தமிழ்நாடு பி.ஜே.பியின் மாநில செயலாளராக இருந்தவர்
• தற்சமயம் தமிழ்நாடு பி.ஜே.பியின்  துணை தலைவராக பதவி வகிக்கிறார்.
• அரசியல் மற்றும் சமூகம் குறித்த தொலைகாட்சி விவாதங்களின் பங்கேற்பாளர்.
• “வீடுதோறும் மோடி” நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பளர்
• பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அரசு சாரா “தாமரை சக்தி” அறக்கட்டளையின் நிறுவனர்.
திரு. சீனிவாசன், வானதி அவர்களின் உற்ற துணையாய் வாழ்வில் கரம் கோர்த்தவர். தொழில்முறையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் தற்சமயம் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசின் துணை சட்ட அலோசகராக பணியாற்றுகிறார்.  திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் புது டில்லி தேசிய இளைஞர் கமிஷன் உறுப்பினராக இருந்தவர். உச்சநீதிமன்றத்தின் வழக்குறைஞர் திரு. பிரசாந்த் பூஷன் அவர்களின் கீழ் பயிற்சி பெற்றவர். தற்சமயம் வட தமிழகத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில செயலராக அங்கம் வகிக்கிறார். 

ஆதர்ஷ் வி. சீனிவாசன், திரு&திருமதி சீனிவாசன் தம்பதியரின் மூத்த மகன். காரத்தே கலையில் “பிளாக் பெல்ட்” பெற்றவர். புனித பீட்ஸில் பயிற்சி பெற்றுவரும் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீர்ர். தற்சமயம் மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

கைலாஷ்.வி. சீனிவாசன் திரு&திருமதி சீனிவாசன் தம்பதியரின் இளைய மகன். வித்யா மந்திர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்..வளர்ந்து வரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர். கராத்தே மற்றும் டிரம்ஸ் கலையில் வெற்றியை பதிக்க முயன்றுவருபவர்.